ரஞ்சி தொடரில் ஆட்டமிழக்காமல் 227 ரன் விளாசிய வீரர்
ரஞ்சிக் கிண்ணத் தொடரின் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடகாவின் ஸ்மரன் ரவிச்சந்திரன் இரட்டை சதம் அடித்தார்.
கருண் நாயர் அரைசதம்
ஹூப்ளியில் கர்நாடகா மற்றும் சண்டிகர் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 
முதல் இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடகா அணியில் அனீஸ் 2 ஓட்டங்களிலும், மயங்க் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
கிருஷ்ணன் ஸ்ரீதித் 17 ஓட்டங்களில் வெளியேறினார். ஆனால் கருண் நாயர் (Karun Nair) மற்றும் ஸ்மரன் ரவிச்சந்திரன் (Smaran Ravichandran) வலுவான கூட்டணி அமைத்தனர்.
கருண் நாயர் 164 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 95 எடுத்த நிலையில் தரன்பிரீத் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஸ்மரன் ரவிச்சந்திரன் இரட்டை சதம்
மறுமுனையில் ஸ்மரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷ்ரேயாஸ் கோபால் 62 ஓட்டங்களும், ஷிகர் ஷெட்டி 59 ஓட்டங்களும் குவித்து அவுட் ஆகினர். ஸ்மரன் இரட்டை சதம் விளாச கர்நாடக அணி 500 ஓட்டங்களை கடந்தது. 8 விக்கெட் இழப்பிற்கு 547 ஓட்டங்கள் குவித்த நிலையில் கர்நாடக அணி டிக்ளேர் செய்தது.
ஸ்மரன் ரவிச்சந்திரன் ஆட்டமிழக்காமல் 227 (362) ஓட்டங்கள் எடுத்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடங்கும். ஜக்ஜித் சிங், விஷு மற்றும் நிஷுன்க் தலா 2 விக்கெட்டுகளும், தரன்பிரீத்சிங் மற்றும் ராஜ் பவா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய சண்டிகர் அணி இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 72 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மணன் வோஹ்ரா 14 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |