மேலே Rolex கீழே Apple Watch., அசத்தலான வாட்ச் பேண்டு Smartlet அறிமுகம்
பாரம்பரிய கைக்கடிகாரம் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் இரண்டையும் ஒரே கையில் அணிய விரும்புவோருக்காக, பிரான்ஸ் நிறுவனமான Smartlet, CES 2026-இல் புதிய இரு முகம் கொண்ட வாட்ச் பேண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
Smartlet தனிச்சிறப்பு
இந்த மாட்யூலர் ஸ்ட்ராப், கைக்கடிகாரத்தின் மேல் பக்கத்தில் பாரம்பரிய அனலாக் வாட்ச், கீழ்புறத்தில் ஸ்மார்ட்வாட்ச் அல்லது ஃபிட்னஸ் டிராக்கரை பொருத்தும் வசதியைக் கொண்டுள்ளது.
Apple Watch, Samsung Galaxy Watch, Google Pixel Watch, Garmin, Fitbit Charge, Whoop போன்ற பிரபல ஸ்மார்ட்வாட்ச்கள் அனைத்துக்கும் இது பொருந்தும்.

அனலாக் வாட்ச் பக்கம், 18 முதல் 24 mm lug width கொண்ட Rolex, Omega, Tudor, TAG Heuer போன்ற பிரீமியம் பிராண்டுகளையும் ஆதரிக்கிறது.
இதன் விலை 418 டொலர் முதல் தொடங்குகிறது. இதில் வாட்ச் சேர்க்கப்படவில்லை, வெறும் ஸ்ட்ராப் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனர் கருத்து
Smartlet நிறுவனர் டேவிட் ஓஹயோன், “ஒவ்வொரு நாளும் அனலாக் வாட்ச் அல்லது ஸ்மார்ட்வாட்ச் எதனை அணியலாம் என குழப்பம் இருந்தது. இதனால் இரண்டையும் ஒரே நேரத்தில் அணியக்கூடிய தீர்வை உருவாக்கினோம்” என தெரிவித்துள்ளார்.
“Boardroom to weekend” என்ற மார்க்கெட்டிங் வாசகத்துடன், luxury watch கலாச்சாரத்தை முன்னிறுத்தி, நவீனகால மனிதனுக்கு ஏற்றதாக விளம்பரப்படுத்தப்படுகிறது.
சவால்கள்
ஸ்மார்ட்லெட் பேண்ட், கையில் 9 முதல் 12 mm கூடுதல் உயரம் சேர்க்கும்.
மேசை, கார் கைரெஸ்ட் போன்ற இடங்களில் அடிக்கடி மோதும் அபாயம் இருப்பதால், பயன்பாட்டு சிரமம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேசமயம், அனலாக் வாட்ச் அழகையும், ஸ்மார்ட்வாட்ச் வசதிகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க விரும்புவோருக்கு இது ஒரு அற்புதமான தயாரிப்பு எனக் கருதப்படுகிறது.
ஸ்மார்ட்லெட், பிரீமியம் வாட்ச் ரசிகர்களுக்கும், டெக் ஆர்வலர்களுக்கும் ஒரே நேரத்தில் கவர்ச்சியாக இருக்கும் புதிய முயற்சியாக CES 2026-இல் கவனம் ஈர்த்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Smartlet two-faced watch band CES 2026 launch, Hide Apple Watch under Rolex Omega TAG Heuer Tudor, Modular strap analog watch plus smartwatch combo, Smartlet stainless steel strap price, Apple Watch Samsung Galaxy Watch Google Pixel Watch compatible, Fitness tracker integration Fitbit Charge Whoop Smartlet band, Modern gentleman luxury watch culture boardroom to weekend, Smartlet band, Smartlet dual watch strap idea, smartwatch plus analog