Smartphoneக்கு அடிமையான நாடுகளின் பட்டியல்! முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?
ஸ்மார்ட்போன் பயன்பாடுகளுக்கு அடிமையான 24 நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் உலகில் Smartphone பயன்பாடு என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது.
பணப்பரிமாற்றம் உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போனின் தேவை ஏற்பட்டுள்ளது.
ஆனால் ''Smartphone Addiction'' என்பது அதிகரித்து வருகிறது என ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எந்த அளவிற்கு ஸ்மார்ட்போன் எனும் சாதனம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பது குறித்த ஆய்வுகள் ஒருபுறம் நடத்தப்பட்டு வருகிறது.
கணக்கெடுப்பு பட்டியல்
இந்த நிலையில் எந்த நாட்டின் மக்கள் அதிகமாக ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
McGill என்ற பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
ஜேர்மனி கடைசி இடத்தில் உள்ளது. எக்ஸ் தளத்தின் வாயிலாக 24 நாடுகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியல்
- சீனா
- சவுதி அரேபியா
- மலேசியா
- பிரேசில்
- தென் கொரியா
- ஈரான்
- கனடா
- துருக்கி
- எகிப்து
- நேபாளம்
- இத்தாலி
- அவுஸ்திரேலியா
- இஸ்ரேல்
- செர்பியா
- ஜப்பான்
- பிரித்தானியா
- இந்தியா
- அமெரிக்கா
- ருமேனியா
- நைஜீரியா
- பெல்ஜியம்
- சுவிட்சர்லாந்து
- பிரான்ஸ்
- ஜேர்மனி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |