ஸ்மார்ட்போன் வெடித்ததில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த பெண்! எச்சரிக்கை செய்தி
இந்தியாவில் செல்போன் வெடித்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் என்.சி.ஆர். நகரில் வசித்து வந்த பெண் செல்போன் வெடித்து இறந்த தகவல் இணையங்களில் பரபரபாக பரவி வருகிறது.
பிரபல யூடியூபர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில், ஸ்மார்ட்போன் வெடித்து தூங்கிக் கொண்டிருந்த தனது அத்தை இறந்து விட்டதாக பதிவிட்டு இருக்கிறார் . ரெட்மி 6ஏ செல்போனை தலையணைக்கு அருகில் முகத்திற்கு நேராக வைத்துக் கொண்டு தூங்கி இருந்திருக்கிறார் அந்த பெண். திடீரென்று அந்த போன் வெடித்து தனது அத்தையின் உயிரை பறித்து இருக்கிறது என்று அந்த யூடியூபர் தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் அந்த ஸ்மார்ட் போனின் தற்போதைய நிலை குறித்த படங்களையும் டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். முன்பக்க பேனல் முழுவதுமாக குப்பையில் போடப்பட்ட நிலையில் பின் பேனல் ஸ்மார்ட் போன் பேட்டரி வெடித்திருக்கிறது.
@Mdtalk16 twitter
இதோடு உயிரிழந்த அந்த பெண்ணின் படமும் உள்ளது. அதில் அவர் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார் இதற்கு அந்த செல்போன் நிறுவனமே பொறுப்பு என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதற்கு பதிலளித்த சியோமி நிறுவனம், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது மற்றும் இதுபோன்ற விஷயங்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.
எங்கள் குழு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளது.
@Mdtalk16 twitter