தூப்பாக்கியால் சரமாரியாக சுட்ட ரஷ்ய வீரர்கள்! உக்ரைன் வீரர் உயிரை காப்பாற்றிய smartphone... ஆச்சரிய வீடியோ
ரஷ்ய படை தாக்குதலில் உக்ரைன் வீரரின் உயிரை அவரின் ஸ்மார்ட்போன் காப்பாற்றியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.அங்குள்ள முக்கிய நகரங்களை அவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ரஷ்ய வீரர்களின் தாக்குதலுக்கு உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினரும் தாக்குதல் நடத்திக்கொண்ட நிலையில், உக்ரைன் வீரரின் பாக்கெட்டில் இருந்த ஸ்மார்ட்போன் உடலில் குண்டு நுழையாமல் அவரது உயிரைக் காத்துள்ளது.
ரஷ்ய வீரர்கள் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய 7.2 மி.மீ. தோட்டா போனில் பதிந்துள்ளது. போனை எடுத்து பார்த்தபோது உக்ரைன் வீரருக்கு இது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் நூலிழையில் உக்ரைன் வீரரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனில் குண்டு பாந்திருந்ததை உக்ரைன் வீரர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.