ஸ்மார்ட்போன் வெடிப்பதற்கு காரணங்கள் இவை தான்! இப்படி இனிமே பண்ணாதீங்க
ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதாக அவ்வபோது செய்திகளை பார்ப்போம். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஒன்பிளஸ் நார்ட் 2 ஸ்மார்ட்போன் வெடித்ததாக செய்தி வெளியானது.
சரி, ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான காரணங்கள் என்ன?
நவீன ஸ்மார்ட்போன்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். பேட்டரிக்குள் இருக்கும் இந்த Lithium-Ion கூறுகளில் ஏதேனும் தவறு நடந்தால், அது உடைந்து ஆவியாகும் எதிர்வினையை உருவாக்கலாம்.
இந்த எதிர்வினைகள் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும். மேலும் பேட்டரிகள் வெடிப்பதற்கு பொதுவான காரணம் அதிக வெப்பம். சார்ஜ் செய்து கொண்டே போனில் அதிக அளவில் பயன்படுத்துவது, அதிகபடியான நேரம் போன் சூடாகுவதை கண்டுகொள்ளாமல் விளையாடுவது போன்றவை பேட்டரி கூறுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி தீ அல்லது வெடிப்புக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: ஆண்ட்ராய்டு Smartphone-ஐ பாதுகாப்பாக வைத்திருக்க இதை மட்டும் செய்தால் போதும்!
அதேபோல தவறான மால்வேர் பாதிக்கப்பட்ட செயலிகளை பயன்படுத்துவது, நேரடி சூரிய வெளிச்சத்தில் போனை வைத்திருப்பது, ஈரப்பதம் இருக்கும் இடத்தில் அதிக நேரம் போனை போட்டுச் செல்வது போன்றவையும் ஸ்மார்ட்போன்கள் வெடிக்க காரணமாக அமைகின்றன.
ஸ்மார்ட்போன் வெடிப்பதை தடுப்பது எப்படி?
ஸ்மார்ட்போன் அதிக வெப்பமாகாமல் பார்த்துகொள்வது ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருக்கும். சரியான போன் கேஸைப் பயன்படுத்துதல், இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்துவிட்டு தூங்குவதை தவிர்த்தல் ஆகியவையும் நல்லது.
ஸ்மார்ட்போன் சார்ஜ் குறைந்தவுடன் மட்டுமே மீண்டும் சார்ஜ் செய்யவும், எடுத்துக்காட்டுக்கு 80 சதவீதம் சார்ஜ் இருக்கும் போது போனை எடுத்துவிட்டு மீண்டும் சார்ஜ் போட வேண்டாம்.