பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..
அமெரிக்காவில் பயணரின் உடலில் கொடிய கட்டி இருப்பதைக் கண்டறிந்து அவரது உயிரைக் காப்பாற்ற ஸ்மார்ட்வாட்ச் உதவியுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனமான Apple-ன் ஸ்மார்ட்வாட்ச் ஒரு அற்புதமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பு கேஜெட்டாக உள்ளது. இந்த ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.
இப்போது அமெரிக்காவில் மற்றொரு நபருக்கு ஒரு அரிய வகை கட்டியை கண்டுபிடித்து, அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.
அமெரிக்காவில் கிம் துர்கி (Kim Durkee) எனும் பெண்ணுக்கு மே மாதத்தில் இரண்டு தனித்தனி இரவுகளில் தனது ஆப்பிள் வாட்சிலிருந்து அவரது இதயம் atrial fibrillation எனும் சிறிய பிரச்சினையை அனுபவிப்பதாக எச்சரிக்கைகளைப் பெற்றார்.
Kim Durkee PC: WBZ-TV
முதலில், தனது ஸ்மார்ட்வாட்ச் தன்னை தவறாகப் கண்காணிப்பதாக நினைத்துள்ளார், ஆனால் பின்னர் அவர் இரண்டாவது முறையாக அதே எச்சரிக்கையைப் பெற்றார்.
மூன்றாம் இரவு, இதயத்துடிப்பு எண்கள் சற்று அதிகமாகவே சென்றதாக காட்டியுள்ளது.
இதனால், சற்று யோசித்த அப்பெண், மருத்துவரை சந்திக்க முடிவு செய்தார். மருத்துவமனையில் தனக்கு கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூறினால், இந்த ஸ்மார்ட்வாட்சை தலையைச் சுற்றி தூக்கி இருந்துவிடலாம் என நினைத்துள்ளார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு சென்றபோது தான் உண்மை தெரிந்தது. மருத்துவ பரிசோதனையில் அவரது இதயத்தில் ஒரு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
Kim Durkee PC: WBZ-TV
அவரது மருத்துவ அறிக்கையில், "ஒரு எளிய மற்றும் பயமுறுத்தும் காரணத்திற்காக அவரது இதயம் ஒழுங்கற்ற முறையில் துடிக்கிறது என்பதை மைனில் உள்ள மருத்துவர்கள் விரைவில் உறுதிப்படுத்தினர். அவளுக்கு மைக்ஸோமா (myxoma) இருந்தது, ஒரு அரிதான, வேகமாக வளரும் கட்டி அது இதயத்தின் இரத்த ஓட்டத்தை நிறுத்தி மூச்சுத் திணறச் செய்து, இறுதியில் பக்கவாதத்தை ஏற்படுத்தியிருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டது.
Kim Durkee PC: WBZ-TV
ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கையின் மூலமாக அவரது உடலில் இருக்கும் பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டதும், மருத்துவர்கள் அவரை மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர்கள் ஆபத்தான கட்டியை அகற்ற ஐந்து மணிநேர இதய அறுவை சிகிச்சை செய்தனர்.
அவரது இதயத்தில் இருந்த நான்கு சென்டிமீட்டர் கட்டி கண்டுபிடிக்கப்படாவிட்டால், கிம் துர்கி சீக்கிரம் இறந்திருப்பார் என்று கூறப்படுகிறது.