65 ஓட்டங்கள்தான் இலக்கு: ஸ்மித் சிக்ஸர் அடித்து வெற்றி..இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து படுதோல்வி
காபாவில் நடந்த இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்டோக்ஸ் தடுப்பாட்டம்
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடந்தது. 
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 334 ஓட்டங்கள் எடுக்க, அவுஸ்திரேலியா 511 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் விக்கெட்டுகள் சரிந்தன. அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) தடுப்பாட்டம் ஆடினார்.
ஆனாலும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. 152 பந்துகளை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 
அவுஸ்திரேலியா வெற்றி
அதன் பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, இங்கிலாந்து அணி 241 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. நேசர் 5 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் போலண்ட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
65 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா, 2 விக்கெட்டுகளை இழந்து 63 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஸ்மித் சிக்ஸர் அடிக்க வெற்றி பெற்றது. ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) 9 பந்துகளில் 23 ஓட்டங்களும், ஜேக் வெதரால்ட் 23 பந்துகளில் 17 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் 17ஆம் திகதி தொடங்குகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |