இரும்பு ஆலையில் ஷெல் தாக்குதல்: அதிகப்படியான கரும்புகையால் மக்கள் பீதி!
- அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இன்று ரஷ்ய ராணுவம் ஷெல் தாக்குதல்.
- இரும்பு ஆலையில் 2000 உக்ரைன் ராணுவ வீரர்கள், 1000 உக்ரைனிய பொதுமக்கள் பதுங்கியுள்ளனர்.
- ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் ஆலையில் இருந்து அதிகப்படியான கரும்புகை வெளியேற்றம்.
மரியுபோலின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இன்று ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் ஆலையில் இருந்து அதிக அளவிலான கரும்புகை வெளியேறி வருகிறது.
மரியுபோல் நகரின் பெரும் பகுதி ரஷ்ய ராணுவத்தின் கட்டுபாட்டிற்க்குள் வந்து இருக்கும் நிலையில், அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை மட்டும் ரஷ்ய ராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் வராமல் உக்ரைன் ராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் இருக்கிறது.
இந்த அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் 2000 உக்ரைன் ராணுவ வீரர்களும், 1000 உக்ரைனிய பொதுமக்களும் சுரங்கங்களின் கீழே பல வாரங்களாக பதுங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில், மரியுபோலின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையையும் தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ரஷ்ய ராணுவம் இன்று ஷெல் தாக்குதலை தொடங்கியுள்ளது.
ரஷ்ய ராணுவம் நடத்திய இந்த ஷெல் தாக்குதலில் மரியுபோலின் இரும்பு ஆலை தீப்பிடித்து அதிக அளவிலான கரும்புகை வெளியேறி வருகிறது, இதனால் அதனுள் பதுங்கி இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகினறனர்.
இந்த தாக்குதல் குறித்து பேசியுள்ள உக்ரைன் அதிகாரிகள், இந்த வாரத்தின் இறுதியில் இருந்தே அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய ராணுவம் கடுமையான ஷெல் தாக்குதலை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: மூன்றாம் உலக போருக்கான உண்மையான ஆபத்து! ரஷ்யா பகீர் எச்சரிக்கையால் பரபரப்பு
மரியுபோலின் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு நேற்று ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்து இருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்து இருப்பது குறிப்பிடதக்கது.
இந்த செய்திக்கான வளம்: SKY NEWS