உடல் எடையை குறைக்க காலை உணவாக சத்தான Smoothie: எப்படி தயாரிப்பது?
உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை.
உடலில் தேவையற்ற கொழுப்புகள் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது.
அந்தவகையில், உடல் எடையை குறைக்க உதவும் காலை உணவாக எடுத்துக்கொள்ள இந்த Smoothie-ஐ எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்-1
- பேரிச்சை-2
- வேர்க்கடலை- 3 ஸ்பூன்
- பால்- 100ml
- தேன்- ஒரு ஸ்பூன்
- காபி தூள்- ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம் , பேரிச்சை பழம், வேர்க்கடலை, பால், தேன், காபி தூள் மற்றும் ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஒரு டம்ளரில் ஊற்றி தினமும் காளி உணவாக குடித்து வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
காலை உணவாக அல்லது தினசரி உடற்பயிற்சி செய்த பின் இந்த Smoothie எடுத்துக்கொள்ளலாம்.
இதை காலை உணவாக தொடர்ந்து குடித்து வர உடல் புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |