தெறிக்கவிட்ட ஸ்மிரிதி மந்தனா, ஹர்லீன்! அவுஸ்திரேலியாவுக்கு 282 ஓட்டங்கள் இலக்கு
மகளிர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 281 ஓட்டங்கள் குவித்தது.
ஸ்மிரிதி மந்தனா
அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
A half-century filled with stylish stroke play!
— BCCI Women (@BCCIWomen) September 14, 2025
4th ODI Fifty for Harleen Deol 👏👏#TeamIndia inching closer to the 200-run mark
Updates ▶️ https://t.co/LS3igwDIqz#INDvAUS | @IDFCFirstBank | @imharleenDeol pic.twitter.com/49Wxr8LF6f
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நியூ சண்டிகரில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.
பிரதிகா நிதானமாக ஆட, மந்தனா அதிரடி அரைசதம் விளாசினார். அவர் 63 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் குவித்தார்.
ஹர்லீன் தியோல்
அடுத்து பிரதிகா 96 பந்துகளில் 64 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, ஹர்லீன் தியோல் (Harleen Deol) அதிரடியில் மிரட்டினார்.
ஹர்மன்பிரீத் 11 ஓட்டங்களில் வெளியேற, ஹர்லீன் 57 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து வந்த ரிச்சா 25 (20) ஓட்டங்களும், தீப்தி ஷர்மா 20 (16) ஓட்டங்களும் விளாச இந்திய அணி 281 ஓட்டங்கள் குவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |