இலங்கை துவம்சம் செய்த ஸ்மிருதி மந்தனா: 10,000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை
மகளிர் கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை கடந்த 2வது இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.
இந்தியா - இலங்கை மோதல்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது.
நடைபெற்று முடிந்த முதல் மூன்று டி20 போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
There’s no stopping @mandhana_smriti tonight! A 35-ball half-century filled with power and precision in equal measure. 💪#INDvSL 4th T20I, LIVE NOW 👉 https://t.co/Azq3cj5z3w pic.twitter.com/EEURK1Bskr
— Star Sports (@StarSportsIndia) December 28, 2025
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
புதிய மைல்கல்லை எட்டிய ஸ்மிருதி மந்தனா
கடந்த மூன்று போட்டிகளாக சொற்ப ஓட்டங்களில் வெளியேறி வந்த நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இந்த போட்டியில் 48 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 80 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வேகமாக 10,000 ஓட்டங்களை கடந்த வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
அத்துடன் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை கடந்த 2 வது இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 10,868 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஒட்டுமொத்தமாக 10,000 ஓட்டங்களை கடந்த 4வது வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆவார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |