இந்திய மண்ணில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா! 7000 ரன் குவித்து சாதனை
மகளிர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 6வது சதத்தினை பதிவு செய்தார்.
பெங்களூருவில் மகளிர் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடி 260 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) 127 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 117 ஓட்டங்கள் விளாசினார்.
Smriti Mandhana continues India's resistance ??
— Women’s CricZone (@WomensCricZone) June 16, 2024
Watch her bring up the fifty ??
(?: BCCI)#INDvSA
pic.twitter.com/4xojgTBEqF
இது அவரது 6வது ஒருநாள் சதம் ஆகும். மேலும் இந்திய மண்ணில் அவர் விளாசிய முதல் சதம் இதுவாகும். அத்துடன் சர்வதேச போட்டிகளில் மந்தனா 7,000 ஓட்டங்களை எட்டினார்.
இதன்மூலம் சர்வதேச அளவில் 7,000 ஓட்டங்களை எட்டிய 6வது வீராங்கனை எனும் சாதனையையும் படைத்தார்.
✅ 6th ODI ?
— Women’s CricZone (@WomensCricZone) June 16, 2024
✅ First in India
Smriti Mandhana reaches her century from 116 balls ?#INDvSA pic.twitter.com/PI8P7UfGbI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |