சதத்தை தவறவிட்ட ஸ்மிருதி மந்தனா: தொடர்ச்சியாக 5 முறை அரைசதங்கள் விளாசல்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 9 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டார்.
பந்துவீச்சை தெரிவு செய்த மேற்கிந்திய தீவுகள்
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் ஆட்டத்தைத் தொடங்கினர்.
ஸ்மிருதி மந்தனா 91
இந்தக் கூட்டணி 110 ஓட்டங்களை குவித்தது. பிரதிகா 69 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சதத்தை நோக்கி பயணித்த ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) ஆட்டமிழந்தார்.
ஸைடா ஜேம்ஸ் ஓவரில் lbw ஆன அவர் 102 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்கள் எடுத்தார்.
எனினும் மந்தனா கடைசி 5 போட்டிகளில் 50 ஓட்டங்களுக்கு மேல் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Smriti Mandhana is simply sublime 🤌🏻
— Women’s CricZone (@WomensCricZone) December 22, 2024
The vice-captain falls just short of her fifth ODI century of 2024!#INDvWI pic.twitter.com/vlA6Gwv878
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |