77 பந்தில் சதமடித்த மந்தனா! அவுஸ்திரேலியரை பின்னுக்குத் தள்ளி உலகின் நம்பர் 1 வீராங்கனையானார்
அவுஸ்திரேலிய வீராங்கனையை பின்னுக்குத் தள்ளி, ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.
ஸ்மிரிதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
End of a smashing powerplay 💥#TeamIndia move to 64/0 after 10 overs
— BCCI Women (@BCCIWomen) September 17, 2025
Updates ▶️ https://t.co/LvgKs0weye#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/h8aH4yopmq
நியூ சண்டிகாரில் நடந்த முதல் போட்டியில் ஸ்மிரிதி மந்தனா 63 பந்துகளில் 58 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், அவுஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனேவை பின்னுக்குத் தள்ளி மீண்டும் மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.
தற்போது நடந்து வரும் இரண்டாவது போட்டியில் 12வது சதத்தையும் பதிவு செய்துள்ளார். அவர் 77 பந்துகளில் 4 சிக்ஸர், 12 பவுண்டர்களுடன் 100 ஓட்டங்களை எட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |