கைவிடப்பட்ட திருமணம் - ஸ்ம்ரிதி மந்தனா, பலாஷ் முச்சல் விளக்கம்
ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சல் இடையேயான திருமணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது கைவிடப்பட்டுள்ளதாக ஸ்ம்ரிதி மந்தனா அறிவித்துள்ளார்.
கைவிடப்பட்ட திருமணம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையாக வலம் வந்த ஸ்ம்ரிதி மந்தனாவிற்கும், பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது.

திருமணத்தன்று, திடீரென ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், திருமணம் திகதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ம்ரிதியின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல், இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக உரையாடியதாக சில ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலானது.

பலாஷ் முச்சல் துரோகம் செய்ததே திருமணம் நின்றதற்கு காரணம் என சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தம் தொடர்பாக பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ம்ரிதி மந்தனா நீக்கினார்.
இந்நிலையில், தனது திருமணம் கைவிடப்பட்டுள்ளதாக ஸ்ம்ரிதி மந்தனா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
ஸ்ம்ரிதி மந்தனா விளக்கம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த சில வாரங்களாக என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் நான் வெளிப்படையாகப் பேசுவது முக்கியம் என்று நினைக்கிறேன்.

நான் மிகவும் தனிப்பட்ட நபர், அதை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன், ஆனால் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். இந்த விஷயத்தை இங்கே முடித்துவிட்டு, உங்கள் அனைவரையும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
பலாஷ் முச்சல் விளக்கம்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பலாஷ் முச்சல், "நான் என் வாழ்க்கையில் முன்னேற முடிவு செய்து, என் தனிப்பட்ட உறவிலிருந்து விலகுகிறேன். எனக்கு மிகவும் புனிதமான ஒன்றைப் பற்றிய ஆதாரமற்ற வதந்திகளுக்கு மக்கள் இவ்வளவு எளிதாக எதிர்வினையாற்றுவதைப் பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது.

இது என் வாழ்க்கையின் மிகவும் கடினமான கட்டம். சரிபார்க்கப்படாத வதந்திகளின் அடிப்படையில் ஒருவரை மதிப்பிடுவதை நிறுத்தக் கற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன். அதன் ஆதாரங்கள் ஒருபோதும் அடையாளம் காணப்படவில்லை.
தவறான மற்றும் அவதூறான உள்ளடக்கத்தைப் பரப்புபவர்கள் மீது எனது குழு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும். இந்த கடினமான நேரத்தில் கருணையுடன் என்னுடன் நின்ற அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |