சிக்ஸர் மழையில் மந்தனா 135 ரன்! முதல் சதமடித்த ப்ரதிகா..மகளிர் இந்திய அணி 435 (வீடியோ)
மகளிர் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 435 ஓட்டங்கள் குவித்தது.
ஸ்ம்ரிதி மந்தனா ருத்ர தாண்டவம்
இந்தியா மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது. அயர்லாந்து அணியின் பந்துவீச்சை தொடக்க ஜோடியான ஸ்ம்ரிதி மந்தனா, ப்ரதிகா ராவல் அடித்து நொறுக்கினர்.
குறிப்பாக ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 70 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
MANDHANA GOES BACK-TO-BACK 6️⃣6️⃣#INDvIRE | (via @BCCIWomen)
— Women’s CricZone (@WomensCricZone) January 15, 2025
pic.twitter.com/nG8J9k3PgH
இதற்கு முன்பு ஹர்மன்பிரீத் கவுர் 87 பந்துகளில் (இந்தியர்களில்) அடித்ததே சாதனையாக இருந்தது. மேலும் சர்வதேச அளவில் மந்தனா 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மொத்தம் 80 பந்துகளில் எதிர்கொண்ட அவர், 7 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 135 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ப்ரதிகா முதல் சதம்
ப்ரதிகா - மந்தனா கூட்டணி 233 ஓட்டங்கள் சேர்த்தது. அடுத்து வந்த ரிச்சா கோஷ் 42 பந்துகளில் 59 ஓட்டங்கள் அடித்தார்.
பின்னர் தனது முதல் சதத்தை பதிவு செய்த ப்ரதிகா, 129 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 20 பவுண்டரிகளுடன் 154 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
Maiden international centuries don’t get better than this! 💙
— Women’s CricZone (@WomensCricZone) January 15, 2025
How special is the 24-year-old Pratika Rawal?#INDvIRE | (via @BCCIWomen)
pic.twitter.com/3UViSwTdQZ
அதன் பின்னர் வந்த தேஜல் 28 ஓட்டங்களும், ஹர்லீன் 15 ஓட்டங்களும் எடுக்க இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 435 ஓட்டங்கள் குவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |