பாகிஸ்தானுக்கு எதிராக 34 பந்தில் அரைசதம்: உலகக்கிண்ணத்தில் ருத்ரதாண்டவமாடிய ஸ்ம்ரிதி மந்தனா
மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் ஸ்ம்ரிதி மந்தனா பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி அரைசதம் விளாசினார்.
ஸ்ம்ரிதி மந்தனா அதிரடி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கிய இந்திய அணி ஷபாலி வெர்மா (6), ஜெமிமா ரோட்ரிகஸின் (1) விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்தது.
அடுத்து வந்த அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் நிதானமாக ஆட, ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். அவர் 34 பந்துகளில் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.

ஃபாத்திமா சனா அபார பந்துவீச்சு
அணியின் ஸ்கோர் 109 ஆக உயர்ந்தபோது, ஸ்ம்ரிதி மந்தனா 68 (44) ஓட்டங்களில் அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும்.
அதனைத் தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் (36) விக்கெட்டை ஃபாத்திமா சனா கைப்பற்றினார். இறுதிகட்டத்தில் அதிரடி காட்டிய ரிச்சா கோஷ் 17 பந்துகளில் 34 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் இந்திய அணி 170 ஓட்டங்கள் சேர்த்தது. ஃபாத்திமா சனா, சாதியா இக்பால் தலா 2 விக்கெட்டுகளும், தாஸ்மியா மற்றும் ரமீன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |