பிரித்தானிய பிரதமரைவிட திறம்பட செயல்படும் ஆட்கடத்தல்காரர்கள்: முன்வைக்கப்படும் விமர்சனம்
புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்குத் திருப்பி அனுப்பும் விடயத்தில், பிரித்தானிய பிரதமரைவிட ஆட்கடத்தல்காரர்கள் திறம்பட செயல்படுவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமரைவிட...
ஆம், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்புவதற்காக பிரான்சுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளார் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர்.

அந்த ஒப்பந்தத்துக்கு ’one-in, one-out’ ஒப்பந்தம் என்று பெயர். அந்த ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 153 புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது பிரித்தானிய அரசு.
விடயம் என்னவென்றால், சில ஆட்கடத்தல் கும்பல்களும் பிரித்தானியாவிலிருந்து புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்குக் கொண்டு விட்டு வருகின்றன.
அதாவது, வட ஆப்பிரிக்க நாட்டவர்கள் பலர், பிரான்சுக்கு செல்வதற்காக, முறைப்படி பிரித்தானியாவுக்கு விசிட்டர் விசாவில் வருகிறார்களாம். அவர்களை இந்த ஆட்கடத்தல் கும்பல்கள் பிரான்சில் கொண்டு விடுகிறார்கள்.

அவ்வகையில், இதுவரை, ஒரு ஆண்டுக்குள், இந்த ஆட்கடத்தல் கும்பல்களில் ஒரே ஒரு கும்பல் மட்டுமே சுமார் 243 பேரை பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு அனுப்பியுள்ளது.
பிரித்தானிய அரசோ, சட்டப்படி, ’one-in, one-out’ ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 153 புலம்பெயர்ந்தோரை மட்டுமே பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
சமீபத்தில், லண்டனைச் சேர்ந்த Uber Eats சாரதியான Crook Madjid Belabes (53) என்பவர் பொலிசாரிடம் சிக்கினார்.
அவர் இதுவரை இப்படி பிரித்தானியாவிலிருந்து புலம்பெயர்ந்தோரை லொறிகள் மூலம் பிரான்சுக்கு அனுப்புவதன் மூலம் 287,000 பவுண்டுகள் சம்பாதித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவருக்கு, வெள்ளிக்கிழமையன்று 10 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆக, பிரித்தானியாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதில் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரைவிட ஆட்கடத்தல்காரர்கள் திறம்பட செயல்படுகிறார்கள் என்கிறார் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ் பிலிப்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |