விமான நிலையத்தில் இருந்த அதிகாரியை தேடி வந்து தீண்டிய பாம்பு! பீதியில் சக ஊழியர்கள்
உகண்டாவில் உள்ள விமான நிலையத்தில் இரவு நேர ஊழியரை பாம்பு ஒன்று கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தில் ஊழியரை கடித்த பாம்பு
இதன் காரணமாக சக ஊழியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். என்டெபே சர்வதேச விமான நிலையத்தில் ஜோனதன் கைசி என்ற அதிகாரி சில தினங்களுக்கு முன்னர் இரவு பணியில் இருந்தார். அப்போது அங்கிருந்த புல்வெளியில் இருந்து வெளியேறிய பாம்பு அலுவலகத்திற்கு தேடி வந்து அதிகாரி ஜோனதனை தீண்டியதாக தெரிகிறது.
இதன்பின்னர் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதே நேரம் இது பாம்பு கடி என்பதில் சந்தேகம் உள்ளதாக உகாண்டா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் வியானி லுக்யா கூறியுள்ளார்.
Daily Monitor / UGC
பீதியில் சக ஊழியர்கள்
ஏனெனில் பாதிக்கப்பட்டவருக்கு இருந்த அறிகுறிகள் பாம்பு கடியுடன் ஒத்துப்போகவில்லை என கூறியிருக்கிறார்.
இதனிடையில் இந்த சம்பவம் மற்ற விமான நிலைய ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியது, ஏனெனில் அவர்கள் அடுத்த இலக்காக இருக்கலாம் என அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.