பாம்பு தன்னை கடித்த கோபத்தில் அதை சாப்பிட்ட நபர்! பின்னர் நடந்த நம்பமுடியாத ஆச்சரியம்
இந்தியாவில் தன்னை பாம்பு கடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பாம்பை சாப்பிட்ட நபர் உயிர் பிழைத்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் சோகத் கிராமத்தை சேர்ந்தவர் மத்தபால் சிங். மத்தபால் நேற்று தனது விளைநிலத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது அவரை பாம்பு கடித்தது.
இதனால் பாம்பின் மீது கோபம் கொண்ட அவர் பாம்பை சாப்பிட்டுள்ளார். இது குறித்து வீட்டில் வந்து சொன்ன போது குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
தற்போது மத்தபால் உயிருக்கு எந்தவொரு ஆபத்துக்கும் இல்லை எனவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விஷப்பாம்பு கடித்தும், அந்த பாம்பை அவர் சாப்பிட்டும் அவர் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாமல் இருந்த கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.