பிக்னிக் சென்ற சிறுமியைத் தீண்டிய பாம்பு: சுவிஸ் நிபுணர்கள் கூறும் தகவல்
சுவிஸ் மாகாணமொன்றில் பிக்னிக் சென்ற எட்டு வயது மாணவி ஒருத்தியை பாம்பு ஒன்று கடித்தது. ஆனால், பாம்புகளைக் குறித்து திகிலடையவேண்டாம் என்று கூறுகிறார்கள் வன உயிர்கள் துறை நிபுணர்கள்.
பள்ளியிலிருந்து பிக்னிக் சென்ற மாணவி
சென்ற வார இறுதியில், சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Balsthal என்னுமிடத்திற்கு, பள்ளியிலிருந்து பிக்னிக் சென்றிருந்த எட்டு வயது மாணவி ஒருத்தியை பாம்பு ஒன்று கடித்துள்ளது.
உடனடியாக, பாம்புகடிக்கு சிகிச்சை வசதிகொண்ட Bernஇலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டாள் அந்த சிறுமி.
Adder
சிறுமியின் நிலைமை
முதலில் வாந்தி ஏற்பட்டு, இரத்த அழுத்தம் குறைந்து சுயநினைவிழப்பதும் மீண்டும் நினைவு வருவதுமாக மாறி மாறி பல பிரச்சினைகளுக்காளானாள் அந்த சிறுமி. ஆனால், சிகிச்சைக்குப்பின் அவளது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், மலையேற்றத்துக்குச் செல்வோர் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ள வன உயிர்கள் துறை நிபுணர்கள், பொதுவாக பாம்புகள் மனிதர்களைத் தவிர்க்கவே விரும்பும் என்றும், அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அவை மனிதர்களைத் தாக்கும் என்றும் கூறுகிறார்கள்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, 1960க்குப் பிறகு பாம்புக் கடியால் யாரும் உயிரிழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |