இரண்டு ஜோடி விஷப்பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்டிய பாம்புபிடிப்பதில் வல்லவர்! அடுத்து நடந்த விபரீத சம்பவத்தின் வீடியோ
இந்தியாவில் இரண்டு ஜோடி பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்டிய நபர் பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளார்.
பீகாரை சேர்ந்தவர் மன்மோகன் (25). பாம்பு பிடிப்பதில் வல்லவராக திகழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் இரண்டு பாம்புகளை ரக்ஷா பந்தன் தினத்தில் பிடித்த மன்மோகன் ஊர் மக்கள் முன்னர் அதை கொண்டு வந்தார். பின்னர் தனது சகோதரிகளுடன் சேர்ந்து பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்டினார்.
அப்போது ஒரு பாம்பு மன்மோகன் காலில் கொத்தியது, ஒரு நிமிடம் அதிர்ந்து போன அவர் பின்னர் சுதாரித்து கொண்டார்.
बिहार के सारण में बहन से साप को राखी बंधवाना महंगा पड़ गया साप के डसने से भाई की चली गई जान pic.twitter.com/675xsgnZ6N
— Tushar Srivastava (@TusharSrilive) August 23, 2021
இருந்த போது சிறிது நேரத்தில் கீழே சுருண்டு விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மன்மோகன் பரிதாபமாக உயிரிழந்தார். மன்மோகனுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாம்புகளை பிடித்து வருகிறார்,காயப்பட்ட பாம்புகளுக்கு சிகிச்சையளித்து வந்தார்.
அவர் போய் பாம்பு கடித்து இறந்தார் என்ற செய்தி அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.