கிரிக்கெட் மைதானத்தில் நுழைந்த பாம்பு; தப்பித்த இலங்கை வீரர்
எல்லா இடங்களிலும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க பார்வையாளர்கள் வருகிறார்கள், ஆனால் இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் 2023-ஐப் பார்க்க பாம்புகள் வருகின்றன.
எல்பிஎல் போட்டியில் மீண்டும் பாம்பு பரபரப்பை ஏற்படுத்தியது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) கொழும்பு பிரேமதாச மைதானத்தில் ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) மற்றும் பி-லவ் கண்டி (Be Love Kandy) அணிகளுக்கிடையிலான போட்டியில் பாம்பு ஒன்று மீண்டும் எதிர்பாராத விருந்தினராக வந்தது.
போட்டி மிகவும் சுவாரஸ்யமாக நடந்து கொண்டிருந்த போது (ஜாஃபாவின் இன்னிங்ஸின் 18வது ஓவரில்) ஒரு பாம்பு மைதானத்திற்குள் நுழைந்தது.
நுவான் பிரதீப் பந்துவீசுவதற்கும் பீல்டிங்கை அமைப்பதற்கும் தயாரான போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாம்பு பீல்டர் இருசு உதானாவை (Isuru Udana) கடந்து சென்றது. கொஞ்சம் இருந்தால் அவர் அந்த பாம்பை மிதித்து இருப்பார். சிறிது இடைவெளியில் தப்பினார். ஆனால், பாம்பை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மைதானத்தை விட்டு வெளியே சென்ற பாம்பு எல்லைக் கோட்டிற்கு வெளியே உள்ள கேமராக்களுக்கு சென்றது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Lucky escape for @IAmIsuru17 from the RPS snake #LPL2023 ???? pic.twitter.com/OnYokQxzvW
— Azzam Ameen (@AzzamAmeen) August 13, 2023
இதேவேளை, இதே போட்டியில், இந்த சீசனில் ஜூலை 31-ஆம் திகதி தம்புள்ளை ஆரா (Dambulla Aura) மற்றும் காலி டைட்டன்ஸ் (Galle Titans) அணிகளுக்கிடையிலான போட்டியில் பாம்பு ஒன்று களம் புகுந்தது. இது கிரிக்கெட் லீக் இல்லை பாம்பு லீக் போல ஆகிவிட்டதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
போட்டியின் விடயத்திற்கு வரும்போது, முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களைப் பெற்றது. முகமது ஹரிஸ் 81 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் 171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய யாழ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதனால் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யாழ்ப்பாண அணி தோல்வியடைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
snake lanka premier league, Lanka Premier League Snake, 2023 Lanka Premier League, LPL 2023, Isuru Udana Snake, Snake in Cricket Ground