தன்னை தானே சாப்பிட தொடங்கிய ராஜ நாகம்! இணையத்தில் வைரல் வீடியோ
அரிய வகை பாம்பு ஒன்று தன்னை தானே சாப்பிட தொடங்கிய வீடியோ ஒன்றில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் பாம்பு ஒன்று தன்னை தானே விழுங்கும் வீடியோ ஒன்று பலரால் பகிரப்பட்டு வருகின்றது. யூடியூப்பில் இதுவரை இந்த வீடியோ 13 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. Rob Clark Venitox என்ற நபர் ராஜ நாகம் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த பாம்பு தன்னை தானே உண்ணத் தொடங்கியுள்ளது.
அப்போது அவர் வித்தியாசமான தந்திரத்தை செயல்படுத்தியுள்ளார். ஹாண்ட் சானிடைசரை அந்த பாம்பின் மீது தடவிய போது விழுங்கிய அதன் முழு உடலையும் வெளியே எடுத்துள்ளது.
இதுகுறித்து பேசிய அவர் பாம்புகளின் கண்களைப் பாதுகாக்கும் தெளிவான செதில்கள் உள்ளன. எனவே அதன் கண்கள் சானிடைசரால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பாம்பு குணமடைந்து தற்போது நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார். ராஜ பாம்புகள் மற்ற பாம்புகளை உண்பதால் அரச பாம்புகளுக்கு இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன.
மன அழுத்தம், பட்டினி அல்லது அதிக சூடான வெப்பநிலை ஆகியவை காரணமாக இது நடக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.