நாகப் பாம்பை பிடித்த உலகின் பாம்பு மனிதனுக்கு நேர்ந்த கதி! அதீத நம்பிக்கையால் நடந்த விபரீதம்: அடித்தே கொன்ற கிராம மக்கள்
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பாம்பு மனிதன் நாகப்பாம்பை பிடித்து கொஞ்ச முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தார்.
வடக்கு பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க Bernardo Alvarez, விஷம் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர். பல விஷப் பாம்புகளை பிடித்துள்ளதால், அதில் சில இவரை கடித்த போதும் எதுவும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் பாம்பின் விஷத்தையே எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராக நம்பப்பட்டது. இதனால், இவரை அங்கிருப்பவர்கள் பாம்பு மனிதன் என்று கூறி அழைத்தர்.
இந்நிலையில், கடந்த 9-ஆம் திகதி Pangasinan மாகாணத்தின் Mangaldan பகுதியில், விஷ நாகப்பாம்பு இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்து அந்த பாம்பை பிடித்துள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அவரை உற்சாகப்படுத்த, உடனே அவர் அந்த நாகப்பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயன்றார். ஆனால், பாம்பு திடீரென்று அவரது வாயில் கடித்துவிட, இதனால் அவர் அந்த இடத்திலே வலியால் துடித்து சில நிமிடங்களுக்குள் சரிந்து விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவசர சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.
இதனால், கடும் கோபமடைந்த மக்கள் அவரின் மரணத்திற்கு காரணமாக அந்த நாகப்பாம்பை கண்மூடித்தனமாக தாக்கி கொன்றனர்.
இது குறித்து அந்த மாகாணத்தின் சுகாதார அதிகாரி மருத்துவர் Anna de Guzman கூறுகையில், நாகப்பாம்பின் விஷம் உடனடியாக பக்கவாதத்தை ஏற்பட்டு, அதன் பின் சுவாசத்தை நிறுத்தி, உடலில் ஆக்ஸின் ஓட்டத்தை பாதித்து இறுதிய்ல் இதய துடிப்பை நிறுத்தலாம்.
அது தான் பாம்பு மனிதனுக்கும் நடந்துள்ளதாக கூறினார். மேலும், வடக்கு பிலிப்பைன்ஸ் அதிக விஷம் கொண்ட நாகப்பாபுகள் இருக்கும் பகுதியாக அங்கிகரீக்கப்பட்டுள்ளது.
இங்கிருக்கும் விஷப்பாம்புகள் தாக்கினால், உடனடியாக சுவாச அமைப்பு பாதிக்கப்பட்டு, ஒரு ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.