பாம்புகள் என்றால் உயிர்! கொடிய சங்கிலி கருப்பன் பாம்பை வைத்து நிகழ்ச்சி நடத்திய நபருக்கு நேர்ந்த கதி.. எச்சரிக்கை செய்தி
அமெரிக்காவில் பாம்புகளை குழந்தை போல கவனித்து அதை பிடிப்பதில் வல்லவராக திகழ்ந்த நபர் பாம்பு கடியால் உயிரிழந்துள்ளார்.
டெக்ஸாஸை சேர்ந்தவர் இகுன் ரொபர்டோ டிலியோன் (60) சாரைப்பாம்பு, பக்கவாட்டில் நகரும் சங்கிலி கருப்பன் என அழைக்கப்படும் பாம்புகளை கையாள்வதில் இவர் கெட்டிக்காரர்.
இந்த நிலையில் அந்த பாம்புகளை வைத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றை செய்து கொண்டிருந்த டிலியோனை அதே பாம்பு கடித்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அவர் குடும்பத்தார் கூறுகையில், பாம்புகளை கையாள்வதில் டிலியோன் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
அவர் விரும்பி செய்த செயலே அவரின் உயிரை பறித்துவிட்டது என கூறியுள்ளனர்.
உயிரிழந்த டிலியோனின் இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.