ஒற்றை பாம்பால் இருளில் மூழ்கிய 11,700 வாடிக்கையாளர்கள்: எரிசக்தி குழு எடுத்த துரித நடவடிக்கை
அமெரிக்காவின் வர்ஜீனியா(Virginia) மாகாணத்தில் பாம்பு ஒன்றினால் சுமார் 11,700 வாடிக்கையாளர்களுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது.
பாம்பினால் மிகப்பெரிய மின்தடை
அமெரிக்காவின் கில்ன் க்ரீக், சென்ட்ரல் நியூபோர்ட் நியூஸ், கிறிஸ்டோபர் நியூபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றை உள்ளடக்கிய வர்ஜீனியா மாகாணத்தின் சுமார் 11,700 வாடிக்கையாளர்கள் சனிக்கிழமை இரவு மின் தடையால் பாதிக்கப்பட்டனர்.
டொமினியன் எரிசக்தி அதிகாரிகள் வழங்கிய தகவலில், பாம்பு ஒன்று அதிக மின்னழுத்த பகுதிக்குள் நுழைந்ததன் காரணமாக இந்த மின் தடையானது ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
கைகள் கட்டப்பட்டு சாலையில் வீசப்பட்ட பெல்ஜியம் நாட்டு இளம்பெண்: சுதந்திர தினத்தன்று நேர்ந்த பயங்கரம்!
பாம்பின் வகை அடையாளம் காணப்படவில்லை, இருப்பினும் eastern garter snakes மற்றும் eastern rat snakes ஆகியவை வர்ஜீனியா மாகாணத்தின் பூர்வீக இனமாகும்.
திரும்பி வழங்கப்பட்ட மின்சாரம்
எரிசக்தி நிறுவன குழு மின்தடை பாதிப்புக்கு உடனடியாக செயல்பட்டு, 90 நிமிடத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மின்சாரத்தை திரும்பி வழங்கினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |