பிரான்சில் தயாரிக்கப்பட்டது! கடத்தி செல்லும் போது கைப்பற்றப்பட்ட பாம்பின் விஷம்... அதன் மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா?
சீனாவுக்கு கடத்தி செல்ல கண்ணாடி ஜாடியில் எடுத்து செல்லப்பட்ட கொடிய பாம்பின் விஷத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியா - வங்கதேச எல்லையில் தான் எல்லை பாதுகாப்பு படையினரால் விஷமானது கைப்பற்றப்பட்டது.
இதன்மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ 32 கோடிகள் (இலங்கை மதிப்பில்) இருக்கும் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்,பாம்பு விஷம் இருந்த ஜாடியில் ‘made in France’ (பிரான்சில் தயாரிக்கப்பட்டது) என குறிப்பு இருந்தது. இது தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட ஜாடி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சீனாவுக்கு அதை கடத்த முயற்சிகள் நடந்தது தெரியவந்துள்ளது.
எங்கள் உயர் அதிகாரிகள் ஜாடியை ஆய்வக சோதனைக்கு அனுப்புவார்கள் என கூறியுள்ளனர்.