தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா....?
நாம் தினமும் உண்ணக்கூடிய பெரும்பாலான உணவுகளில் கறிவேப்பிலை சேர்ப்பது வழக்கமாக வைத்துள்ளோம். பொதுவாக கறிவேப்பிலை வாசணைக்காக சேர்க்கக் கூடிய ஒரு இலை என்று கருதுகிறோம்.
ஆனால் அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கறிவேப்பிலையில் காணப்படுகிறது. .
இந்த கருவேப்பிலை ஆனது உங்கள் இருதயத்தை சீராக இருக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது. உங்கள் தலைமுடி மற்றும் உங்கள் தோல் ஆகிவற்றின் தன்மையை சீராக்குவது மட்டுமன்றி இன்னும் பல நன்மைகளை தருகின்றது.
அந்த வகையில் தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
ரத்த சோகை பிரச்சினையை குறைக்க
கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது. இந்த போலிக் ஆசிட் என்பது முக்கியமாக உடலில் உள்ள இரும்புச் சத்தை ஈர்ப்பதற்கு மற்றும் கொண்டு சேர்ப்பதற்கு உதவியாக இருக்கிறது. இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் அடியோடு குறைந்து விடும் என்று கூறுகின்றனர். முடிந்தவரை நம் உணவில் அதிகமான கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வது நல்லது.
சர்க்கரை வியாதியை குறைக்கும்
கறிவேப்பிலை இயற்கையாகவே சர்க்கரை வியாதிக்கு மருந்தாக வேலை செய்கிறது. கறிவேப்பிலையை தினமும் எடுத்துக்கொண்டால், அதில் உள்ள நார்ச் சத்தானது சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் கிடைக்கும் பொழுது அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்பொழுதுமே சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.
நரையை போக்குகிறது
இன்று நம்மில் பலருக்கும் சிறு வயதிலேயே தலை முடி நரைத்து விடுகிறது. கறிவேப்பிலை நம் தலைமுடி நிறத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நம் தலைமுடி நரைத்து விடாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. தேவையான அளவு நாம் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் நரை பிரச்சனை முற்றிலும் குறைந்து விடும்.
தினமும் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மேலே குறிப்பிட்ட பலவிதமான பிரச்சனைகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.