சுவிஸ் நகரமொன்றில் கலவரத்துக்கு அழைப்பு: சமூக ஊடகங்களில் செய்தி பரவியதால் பரபரப்பு
சுவிஸ் நகரமான ஜெனீவாவில், கலவரம் ஒன்றில் பங்கேற்க வருமாறு சமூக ஊடகம் ஒன்றில் அழைப்பு விடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக ஊடகத்தில் பரவிய தகவல்
நேற்றிரவு, ஜெனீவா நகரின் மையத்தில் கலவரம் ஒன்றில் பங்கேற்க வருமாறு சமூக ஊடகம் ஒன்றில் செய்திகள் பரவியதைத் தொடர்ந்து பொலிசார் உஷாராகினர்.
பட்டாசுகள் மற்றும் புகை குண்டுகளுடன் வந்து சேருமாறு அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது. குறிப்பாக, FNAC மற்றும் Foot Locker நிறுவனங்களை குறிவைக்குமாறு சில செய்திகள் கூறின.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், கூட்டமாக நின்ற இளைஞர்களிடம் சோதனைகள் மேற்கொண்டார்கள். முகமூடி அணிந்த ஒருவரிடம் கையுறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களில் பெரும்பாலானவர்களை வீட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு பொலிசார் ஆலோசனை கூறினர். யாராவது இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது தெரியவரவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |