நூதன போராட்டம்... உலக மக்களுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
ரஷ்ய படையெடுப்பு தொடர்பில் உலக நாடுகளின் ஆதரவை பெற நூதன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.
உக்ரைனின் டான்பாஸ் நகர் மீது ரஷ்ய துருப்புகள் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையிலேயே, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த நூதன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜெலென்ஸ்கி, உலக நாடுகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் நாட்டின் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்க வேண்டும் எனவும், அதில், உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப கேளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் இந்த கோரிக்கையானது டுவிட்டர் பக்கத்தில் தீயாக பரவவே, பலர் உக்ரைனுக்கு ஆதரவாக குட்டி காணொளிகளை தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய துருப்புகள் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, கனரக ஆயுதங்கள் கேட்டு உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கீவ் நகர சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேறிய ரஷ்ய துருப்புகள், தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளதுடன், தற்போது டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளில் ரஷ்ய துருப்புகள் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
ரஷ்ய துருப்புக்கள் டான்பாஸிற்கான போரைத் தொடங்கிவிட்டன என்பதை நாம் இப்போது உறுதிப்படுத்த முடியும், அவர்கள் நீண்ட காலமாகத் தயாரெடுத்து வருகின்றனர். ரஷ்ய இராணுவத்தின் பெரும்பகுதி இப்போது இந்த தாக்குதலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.