சூரிய கிரகணத்தால் மொபைல் போன்களுக்கு பாதிப்பு: நாசா எச்சரிக்கை
2024ஆம் ஆண்டின் முதல் முழுமையான சூரிய கிரகணம் என்னும் அரிய நிகழ்வு இன்று நடைபெறும் நிலையில், நாசா அது தொடர்பில் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மொபைல் போன்களுக்கு பாதிப்பு
மக்கள் கைகளில் மொபைல் போன்கள் வந்தாலும் வந்தது, கண்ணில் பார்ப்பதை எல்லாம் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது இன்றைய காலகட்டத்தில் வழக்கமான ஒரு விடயமாகிவிட்டது.
Credit: Getty
ஆக, இன்று முழு சூரிய கிரகணம் நிகழும் நிலையில், அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க பலரும் முனையக்கூடும்.
ஆகவே, அது தொடர்பில் நாசா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆம், சமூக ஊடகமான எக்ஸில், சூரிய கிரகணம் ஸ்மார்ட் போன்களை பாதிக்குமா என நாசாவிடம் கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது.
Credit: Getty
அதற்கு பதிலளித்த நாசா, ஆம், சூரியனுக்கு நேராக உங்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்க முயலும்போது மொபைல் போனின் சென்ஸார் சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, உங்கள் மொபைல் போனுடன் magnifying lens எதையாவது பொருத்தி புகைப்படம் எடுக்க முயன்றால் நிச்சயம் மொபைல் போன் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது நாசா.
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |