பூமியை இன்று தாக்க உள்ள சூரிய புயல் - இந்தியாவில் அரோராவை காண வாய்ப்பு

India
By Karthikraja Jun 08, 2026 06:21 AM GMT
Report

இன்று சூரிய புயல் பூமியை தாக்க உள்ளதால், இந்தியாவில் அரோராவை காண வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூமியை தாக்க உள்ள சூரிய புயல்?

கடந்த ஜூன் 6 ஆம் திகதி சூரியனின் ஆக்டிவ் ரீஜியன் 4461' (Active Region 4461) என்ற பகுதியில், 'M 1.8' ரகத்தை சேர்ந்த ஒரு சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு (Solar Fare) நிகழ்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த வெடிப்பின் காரணமாக, ஒரு பில்லியன் டன் எடையுள்ள காந்தமயமாக்கப்பட்ட பிளாஸ்மா மேகத்தையும் வினாடிக்கு 1,400 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் விண்வெளியில் செலுத்தியது. அந்த மேகம் தற்போது பூமியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. 

பூமியை இன்று தாக்க உள்ள சூரிய புயல் - இந்தியாவில் அரோராவை காண வாய்ப்பு | Solar Storm To Hit Earth June8 See Aurora In India

இதனால் பூமிக்கு ஜி3 என்ற வலுவான புவிகாந்தப் புயல் எச்சரிக்கையை சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்கும் அமெரிக்க அமைப்பான விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் (SWPC) விடுத்துள்ளது.

புயலின் தாக்கம் அதன் காந்தப்புலத்தின் திசையை பெருமளவில் சார்ந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஒருவேளை சூரிய புயலின் காந்தப் புலம் தெற்கு நோக்கி அமைந்தால் அது பூமியை பாதுகாக்கும் காந்த மண்டலத்தை (Magnetosphere) தற்காலிகமாக பலவீனப்படுத்தும். 

இதனால், சூரியனின் மின்னூட்ட பெற்ற துகள் பூமியின் வளிமண்டலத்திற்குள் ஆழமாக ஊடுருவக்கூடும்.

இந்தியாவில் அரோரா?

மின்னூட்டம் பெற்ற இந்த சூரியத் துகள்கள் வளிமண்டலத்தின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவும் போது, இரவு வானில் Northern and Southern Lights எனப்படும் 'அரோரா' வண்ண ஒளிகளை உருவாக்கும். 

வழக்கமாக துருவ பகுதிகளில் மட்டுமே வானில் தெரியும் வண்ணமயமான அரோரா, இந்த முறை காந்த புயலின் தீவிரம் காரணமாக வட இந்தியாவின் சில பகுதிகள், மத்திய ஐரோப்பா, வட அமெரிக்கா, மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய பகுதிகளிலும் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பூமியை இன்று தாக்க உள்ள சூரிய புயல் - இந்தியாவில் அரோராவை காண வாய்ப்பு | Solar Storm To Hit Earth June8 See Aurora In India

திங்கட்கிழமை இரவு வானம் ஒளிருமா அல்லது இருட்டாகவே இருக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரே காரணியான Bz திசையானது, பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு செயற்கைக்கோள்களை அந்த மேகம் கடக்கும்போது மட்டுமே அளவிடப்படும்.

15 முதல் 60 நிமிடங்களுக்கு முன்புதான் இந்த ஒளியின் முழுமையான தீவிரம் நமக்குத் தெரியவரும்.

மக்களுக்கு பாதிப்பா?

முன்னதாக Active Region 4455 எனப்படும் சூரியனின் மற்றொரு பகுதியில் இருந்து உருவான சில சிறிய மறறும் வேகம் குறைந்த சூரியப் புயல்கள் இன்னும் விண்வெளியில் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

புதிதாக ஏவப்பட்ட, வேகமான சூரியப் பெருவெடிப்பானது, மெதுவாக நகரும் இந்த மேகங்களை முந்திச் சென்று தன்னுள் ஈர்த்துக்கொண்டால், அது பூமியை வந்தடைவதற்கு முன்பே இன்னும் அதிக சக்தி வாய்ந்ததாக மாறக்கூடும்.

இந்தப் புயலால் பூமியில் உள்ள மக்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், வலுவான புவிகாந்தக் கோளாறுகள் அவ்வப்போது செயற்கைக்கோள் செயல்பாடுகள், ஜிபிஎஸ் வழிசெலுத்தல், வானொலித் தொடர்புகள் மற்றும் மின் அமைப்புகளைப் பாதிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US