30 மணிநேர சண்டை...21 பேர் உயிரிழப்பு: தீவிரவாத முற்றுகையை முறியடித்த பாதுகாப்பு படை
தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டது சோமாலியாவின் ஹயாத் ஹோட்டல்.
21 பேர் உயிரிழந்த நிலையில் 117 பேர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல்.
சோமாலியாவின் தலைநகரில் உள்ள ஹோட்டலை அல் கொய்தா தீவிரவாதிகளின் முற்றுகையில் இருந்து பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளனர், இதில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஹயாத் ஹோட்டலை அல் கொய்தா தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் முற்றுகையிட்ட நிலையில் டஜன் கணக்கானவர்கள் பயணக்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டனர்.
REUTERS
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை முதல் கிட்டத்தட்ட 30 மணி நேர சண்டைக்கு பிறகு பாதுகாப்பு படையினர் ஹோட்டலை அல்-கொய்தா தீவிரவாதிகளின் முற்றுகையில் இருந்து மீட்டுள்ளனர்.
இதில் 21 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், 117 பேர் காயமடைந்துள்ளனர் என உறுதி செய்து இருப்பதாக சுகாதார அமைச்சர் அலி ஹாஜி தேசிய ஒளிபரப்பாளரான எஸ்என்டிவியிடம் தெரிவித்தார்.
REUTERS
மேலும் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராணுவ நடவடிக்கையின் போது மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவற்றில் ஹசன் என்ற ஒருவரின் பெயரை மட்டும் பொலிஸ் கேப்டன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு; விராட் கோலியை எளிதாக நினைக்க வேண்டாம்...அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர்: பாகிஸ்தான் பந்துவீச்சாளர் எச்சரிக்கை
இந்த தாக்குதலுக்கு அல் கொய்தாவுடன் தொடர்புடைய அல் ஷபாப் குழு பொறுப்பேற்றுள்ளது.