உக்ரைனில் போர்நிறுத்த பகுதியில் பயங்கர தாக்குதல்.. பொதுமக்கள் 200 பேர் இடிபாடுகளில் புதைந்த பரிதாபம்!
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள Mariupol பகுதியில் உக்ரேனிய போராளிகள் நடத்திய தாக்குதலில் கிட்டதட்ட 200 பேர் இடிபாடுகளில் புதைந்துள்ளதாக Donetsk மக்கள் குடியரசின் தலைவர் டெனிஸ் புஷிலின் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் இடையேயான 2ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட உடன்படிக்கையின் படி, உக்ரைனின் Mariupol மற்றும் Volnovakha நகரங்களிலிருந்து மக்களை வெளியேற்ற, அங்கு தற்காலிக போர்நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனையடுத்து, மக்களை வெளியேற்ற Zaporozhye வரையிலான பாதையை Mariupol நகர சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில், Mariupol நகரில் உள்ள 15/20 Meotida Boulevard-வில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்து வெடிகுண்டுகளை, AZOV படைப்பிரிவைச் சேர்ந்த உக்ரேனிய போராளிகள் வெடிக்கச் செய்ததாகவும், இதில் கட்டிடம் ஒன்று இடிந்துவிழுந்துள்ளதாக Donetsk மக்கள் குடியரசின் தலைவர் டெனிஸ் புஷிலின் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் விளைவாக, அந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் பதுங்கியிருந்து குழந்தைகள், பெண்கள் உட்பட கிட்டதட்ட 200 பேர் இடிபாடுகளில் புதைந்துள்ளதாக டெனிஸ் புஷிலின் தகவல் தெரிவித்துள்ளார்.