மறந்தும் கூட இந்த இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க: என்னென்ன தெரியுமா?
உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உணவுகள் மிகவும் அத்தியாவசியமான ஒன்று.
தினமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற சரியானயளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒருசில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும்பொழுது உடலில் அசௌகரியங்களை ஏற்படுத்தி, பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
அந்த வகையில் எந்த மாதிரியான உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
பழங்களுடன் பிற உணவுகள்
எப்பொழுதும் பழங்களுடன் மற்ற உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாதென ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பழங்களுடன் பிற உணவுகளை சேர்த்து சாப்பிடும்பொழுது அதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும்.
மேலும் பழங்களை சாப்பிடுவதற்கும், உணவுகளை உண்பதற்கும் இடையில் போதுமான இடைவெளியிட விட வேண்டும்.
கொழுப்பு இறைச்சியுடன் சீஸ்
கொழுப்புள்ள இறைச்சியுடன் சீஸ் சேர்த்து சாப்பிடுவதனால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்.
இதனால் உடலில் இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும்.
சிட்ரஸ் பழங்களுடன் பால்
சிட்ரஸ் பழங்களில் அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த பழங்களை பாலுடன் சேர்க்கும் போது, அது பாலை திரியச் செய்து, செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
மேலும் எப்பொழுதும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், 2 மணிநேர இடைவெளி விட்டு பின் பாலைக் குடியுங்கள்.
இரும்புச்சத்துடன் கால்சியம்
இரும்புச்சத்து மற்றும் கால்சியம் இவை இரண்டும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆனால் இவற்றை ஒன்றாக சாப்பிடும்பொழுது உடலால் இந்த சத்துக்களை உறிஞ்சப்படாமல் போகும்.
உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்க இரும்புச்சத்துடன் வைட்டமின் சி நிறைந்த உணவையும் , கால்சியத்துடன் வைட்டமின் டி நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
மீனுடன் பால்
பால் பொருட்களை எப்பொழுதும் இறைச்சியுடன் உண்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
முக்கியமாக மீனுடன் பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது செரிமான செயல்பாட்டை பாதித்து, கடுமையான செரிமான பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |