முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுகள்: என்னென்ன தெரியுமா?
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய உணவு என்றால் அது முட்டை தான்.
முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது.
எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அதன் ஆற்றலும் அதிகரிக்கும்.
ஆனால் ஒரு சில உணவு பொருளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.
என்னென்ன உணவுகள்?
ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்கள் முட்டையுடன் சேர்த்து சாப்பிட கூடாது.
இனிப்பு உணவு பொருட்களுடன் முட்டையை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முட்டையுடன் பால் சேர்த்து சாப்பிடும்பொழுது அது ஜீரண கோளாறுகளை ஏற்படுத்தலாம்.எனவே முட்டையுடன் பால் உண்பதை தவிர்க்க வேண்டும்.
சோயா- பால் முட்டை இடண்டுமே புரதங்கள் நிறைந்த உணவுகள்.இதை இரண்டும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் புரத்தித்தின் சீரற்ற தன்மையை ஏற்படுத்தும்.
முட்டையுடன் ஊறுகாய் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதுபோல் முட்டையுடன் தேநீர் சேர்த்து அருந்துவதை தவிர்க்க வேண்டும்.சில வேளைகளில் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |