ஒரே மாதத்தில் 5 கிலோ வரை உடல் எடையைக் குறைப்பதற்கான டயட் டிப்ஸ்: இதை மட்டும் செய்யுங்கள்
உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் இடையில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடை அதிகரிக்க சரியான உறக்கம் இல்லாதது, தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்களும் உடல் எடை அதிகரிக்க செய்யும்.
அந்தவகையில், ஒரே மாதத்தில் உடல் எடையை 5-6 கிலோ வரை குறைக்க வேண்டும் என்றால் உங்களுக்காகவே இந்த டயட் ப்ளாண்.
Adobe stock
காலை உணவு
காலை நேர உணவுகளை ஒரு போதும் நீங்கள் மிஸ் பண்ணக்கூடாது காலை உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
இட்லி,தோசையாக இருந்தால் அளவாக சாப்பிடவும். இல்லையென்றால் ஓட்ஸ் கஞ்சி, உங்களுக்குப்பிடித்த பழங்கள், காய்கறிகளை சாலட்டாக சாப்பிடலாம்.
ஒருவேளை காலை 11 மணிக்கு மேல் பசி உணர்வு ஏற்பட்டால் பொரிகடலை, அவுல் போன்ற ஊட்டச்சத்துள்ள ஸ்நாக்ஸ்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
மதிய உணவு
மதிய உணவு 1-2 மணிக்குள் கண்டிப்பாக இருக்க வேண்டும். மதிய உணவில் கொஞ்சமாக சாப்பாடு மற்றும் போதுமான அளவிற்கு காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த சாலட்டுகளையும் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். இது நீண்ட நேரத்திற்குப் பசி உணர்வை ஏற்படுத்தாது.
மாலை நேர சிற்றுண்டி
உடல் எடை குறைப்பில் இருந்தால் நீங்கள் பால் கலந்த பானங்களை பருகக்கூடாது. அதற்கு மாறாக நாட்டு சர்க்கரைக் கலந்த கடும் டீ, மசாலா டீ யை நீங்கள் பருகலாம்.
வறுத்த கடலை, முந்திரி போன்ற நட்ஸ்களைச் சாப்பிடுங்கள். எண்ணெய் பலகாரங்கள், பேக்கரி பொருள்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
இரவு உணவு
தினமும் இரவு 7 மணிக்குள் இரவு நேர டிப்பன் இருக்க வேண்டும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்த பெர்ரி- புதினா ஸ்மூத்தி, செர்ரிப்பழ ஸ்மூத்தி, பழங்கள் மற்றும் கீரைகள் ஸ்மூத்தியை சாப்பிடலாம்.
இட்லி,தோசை, சப்பாத்திகளைச் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் 3 அல்லது 4 சாப்பிடுங்கள். அதுவும் நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.
உறக்க நேரம்
இரவில் 7 மணிக்குள் சாப்பிடுவதால் நிச்சயம் பசி உணர்வு இருக்கும் என்பதால் தூங்குவதற்கு முன்னதாக, ஒரு கப் க்ரீன் டீ குடிக்கவும்.
இது நாள் முழுவதும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவியாக இருக்கும். மேலும் முழு உடலையும் சுத்தப்படுத்த உதவுவதோடு, நல்ல தூக்கத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |