ரூ.30 கோடி மதிப்புள்ள Bugatti Chiron காரை தந்தைக்கு பரிசளித்து திகைக்க வைத்த மகன்
இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது தந்தைக்கு ரூ.30 கோடி மதிப்புள்ள Bugatti Chiron காரை வாங்கி கொடுத்து திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியத் தந்தைகளை ஆச்சரியப்படுத்துவது எளிதான காரியம் அல்ல. ஆனால் அது நிகழும்போது அவர்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
சமீபத்தில், இளம் இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது தந்தைக்கு ரூ.30 கோடி மதிப்பிலான புகாட்டி சிரோன் (Bugatti Chiron) காரை பரிசளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் தொழிலதிபரின் தந்தை தனக்கு காத்திருக்கும் ஆச்சரியத்தை அறியாமல் துபாய் மாலுக்கு வெளியே அமர்ந்திருக்கிறார்.
அப்போது அவர், Bugatti Chiron காரை அருகில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து காரின் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கிறார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒருவர் வந்து அவரிடம் காரின் சாவியைக் கொடுக்கிறார். ஆனால் அவர் முதலில் சாவியை வாங்க மறுக்கிறார். பின்னர், அவரது மகன் வந்து கார் தன்னுடையது என்று தந்தையிடம் சொல்லி, சாவியை வாங்கும்படி கூறுகிறார்.
இதையடுத்து அவர், மகனை ஆரத்தழுவி உணர்ச்சிவசப்படுகிறார். பின், தன் தந்தையை ஓட்டுநர் இருக்கையில் அமர வைக்கிறார். அப்போது, உணர்ச்சிவசப்பட்ட தந்தை தனது மகனின் சாதனையைக் கண்டு வியந்து பிரார்த்தனை செய்கிறார்.
1777 நாட்கள் கொண்ட SBI Green Deposit FD திட்டம்.., ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை?
இந்த புகாட்டி சிரோன் கார், உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் பிரத்தியேக ஹைப்பர் கார்களில் ஒன்றாகும்.
இது, உலகம் முழுவதும் 500 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும். இந்த ஐகானிக் காரின் விலை 3.8 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ.30 கோடி) ஆகும்.
இது 1,500 PS மற்றும் 1,600 Nm டார்க்கை உற்பத்தி செய்யும். 8.0-லிட்டர் குவாட்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட W16 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
இது வெறும் 2.4 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தில் செல்ல முடியும். மேலும் இதன் உச்ச வேகம் எலக்ட்ரானிக் முறையில் 420 கிமீ/மணிக்கு மட்டுமே.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |