சிறை செல்லும் ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர்
நோர்வே நாட்டு இளவரசியின் மகனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறை செல்லும் ராஜ குடும்ப உறுப்பினர்
நோர்வே நாட்டின் பட்டத்து இளவரசி Mette-Marit (52). இளவரசியின் மகன் Marius Borg Høiby (29). இளவரசியின் மகனான Høiby மீது 40 குற்றச்சாட்டுகள் உள்ளன.

அவற்றில், இரண்டு வன்புணர்வுக் குற்றச்சாட்டுகள், ஒரு குடும்ப வன்முறைக் குற்றச்சாட்டு உட்பட 34 குற்றச்சாட்டுகளில் Høiby குற்றவாளி என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு சட்டத்தரணிகள் Høibyக்கு 7 ஆண்டுகள் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை கோரியிருந்தார்கள். ஆனால், Høibyக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Høiby தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவரும் நிலையில், அவர் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |