இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் முதல் சதம் விளாசிய இலங்கை வீரர்
இலங்கையின் சோனல் தினுஷா இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் முதல் சதத்தை பதிவு செய்தார். காலியில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர் சோனல் தினுஷா சதம் அடித்தார்.
இந்திய அணி 462 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
காலி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்களும், கே.எல்.ராகுல் 82 ஓட்டங்களும், துருவ் ஜுரேல் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.
பிரபத் ஜெயசூரியா 4 விக்கெட்டுகளும், கேஷாரா நுவந்தா 3 விக்கெட்டுகளும், அஸிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் நிஷான் பெர்னாண்டோ டக்அவுட் ஆனார்.
தினேஷ் சண்டிமல் 4 ஓட்டங்களில் வெளியேற, உதாரா 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கமிந்து மெண்டிஸ் (14), தனஞ்செய டி சில்வா (21) ஆகியோர் சொதப்பினர். எனினும் சோனால் தினுஷா, நிரோஷன் திக்வெல்ல வலுவான கூட்டணி அமைத்தது.

சோனல் தினுஷா சதம்
அரைசதம் அடித்த நிரோஷன் திக்வெல்ல (Niroshan Dickwella) 80 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதற்கிடையில் சோனல் தினுஷா (Sonal Dinusha) தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
அவரது சதத்தின் மூலம் 'ஃபாலோ-ஆன்' செய்வதை இலங்கை அணி தவிர்த்தது. 100 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தினுஷா ஆட்டமிழக்க, இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 178 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
மானவ் சுதர் 4 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
FIRST OF MANY! 💯#SLvIND pic.twitter.com/OlySxWBTCM
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) August 17, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |