தனியாளாக போராடும் இலங்கை வீரர்: சூடுபிடிக்கும் இரண்டாவது டெஸ்ட்
Sri Lanka 265-8 against india in colombo: கொழும்பு டெஸ்டின் மூன்றாம் நாளில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
பஸிந்து சூரியபந்தரா 80 ஓட்டங்கள்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கொழும்பில் நடந்து வருகிறது.

மூன்றாவது நாளான இன்று இலங்கை அணி முதல் இன்னிங்ஸைத் தொடர, கமிந்து மெண்டிஸ் 32 ஓட்டங்களில் வெளியேறினார்.
பின்னர் அணித்தலைவர் தனஞ்செய டி சில்வாவை 8 ஓட்டங்களில் மானவ் சுதர் பந்துவீச்சில் அவுட் ஆக, அரைசதம் அடித்த பஸிந்து சூரியபந்தரா (Pasindu Sooriyabandara) 80 ஓட்டங்களில் ரவீந்திர ஜடேஜாவின் ஓவரில் ஆட்டமிழந்தார்.
போராடும் சோனல் தினுஷா
அடுத்து நிரோஷன் திக்வெல்ல டக்அவுட் ஆனார். எனினும் சோனல் தினுஷா மற்றும் கேஷாரா வலுவான கூட்டணி அமைத்தனர்.
சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டிய சோனல் அரைசதம் அடிக்க, கேஷாரா 18 (74) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தனியாளாக போராடி வரும் சோனல் தினுஷா (Sonal Dinusha) 85 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |