ஏஞ்சலோ மேத்யூஸிற்கு பதிலாக அறிமுக வீரர்: உற்சாகமாக வரவேற்ற இலங்கை அணி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வங்காளதேசம் துடுப்பட்டதை தெரிவு செய்தது.
கொழும்பில் தொடங்கிய டெஸ்ட்
இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேச அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (Najmul Hossain Shanto) துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி ஷாத்மான் இஸ்லாம் மற்றும் அனமுல் ஹக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அனமுல் ஹக் 10 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், ஓட்டங்கள் எடுக்காமல் அசிதா பெர்னாண்டோ ஓவரில் கிளீன்போல்டு ஆனார்.
சோனல் தினுஷா
அதனைத் தொடர்ந்து மொமினுள் ஹக் களமிறங்கியுள்ளார். கடந்த டெஸ்டில் விளையாடாத விஷ்வா பெர்னாண்டோ இந்த டெஸ்ட்டில் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
இதற்கிடையில், சோனல் தினுஷா (Sonal Dinusha) அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். இவருக்கு சக இலங்கை அணி வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இவர் ஏஞ்சலோ மேத்யூஸிற்கு (Angelo Mathews) பதிலாக இந்த டெஸ்டில் விளையாடுகிறார். சோனல் தினுஷா 48 முதல் தர போட்டிகளில் விளையாடியவர் ஆவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |