இந்தியாவில் BRAVIA Theatre System 6, Bar 6 சவுண்ட்பார்களை வெளியிட்ட Sony
Sony நிறுவனம் இந்தியாவில் BRAVIA Theatre System 6 மற்றும் Bar 6 சவுண்ட்பார்களை வெளியிட்டுள்ளது.
ஜூன் 30-ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், Sony India நிறுவனம் தனது புதிய BRAVIA Theatre System 6 மற்றும் BRAVIA Theatre Bar 6 ஆகிய இரண்டு புதிய சவுண்ட்பார் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஹோம் தியேட்டர் சாதனங்கள் திரைப்பட தரத்திற்கேற்ப இயங்கும் மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
BRAVIA Theatre Bar 6
BRAVIA Theatre Bar 6 என்பது ரூ.39,990க்கு விற்பனைக்கு வரும் 3.1.2 சேனல் சவுண்ட்பார் ஆகும். இதில் வைர்லெஸ் சப்வூஃபர், upfiring ஸ்பீக்கர்கள், மற்றும் Dolby Atmos, DTS:X, Vertical Surround Engine உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
BRAVIA Theatre Bar 6 ஜூலை 1 முதல் விற்பனைக்கு வருகிறது.
BRAVIA Theatre System 6
BRAVIA Theatre System 6 என்பது ரூ.49,990க்கு விற்பனை செய்யப்படவுள்ள 5.1 சேனல் ஹோம் தியேட்டர். இதில் 1000 வாட் அவுட்புட், வைர்லெஸ் பின்புற ஸ்பீக்கர்கள், Multi-Stereo Content வசதி, Voice Zoom 3 AI தொழில்நுட்பம், மற்றும் S-Force PRO Front Surround போன்ற அம்சங்கள் உள்ளன.
BRAVIA Theatre System 6 ஜூலை 3 முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.
இரண்டும் Sony Bravia Connect செயலியில் வசதியாக கட்டுப்படுத்தக்கூடியவை. Voice Mode மற்றும் Night Mode போன்ற வசதிகளும் இதில் உள்ளன.
"இந்த பிரீமியம் ஹோம் எண்டர்டெயின்மென்ட் மார்க்கெட்டில், இந்தியாவிலேயே நாங்கள் 50% மார்க்கெட் ஷேர் பிடிக்க எண்ணுகிறோம்" என Sony India MD சுனில் நையர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sony BRAVIA Theatre System 6 India, Sony Bar 6 soundbar launch 2025, BRAVIA Theatre System 6 price, Sony Dolby Atmos soundbar India, Sony premium home theatre system, Sony soundbar with wireless subwoofer, BRAVIA soundbar for OTT content, Sony Voice Zoom 3 soundbar, Sony BRAVIA Connect app soundbar, Home theatre launch Sony India 2025