மதிக்க வேண்டும்.., மாநாட்டில் விஜய் பேசிய கருத்திற்கு நடிகர் சூரி விமர்சனம்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாநாட்டில் பேசியது குறித்து நடிகர் சூரி விமர்சனம் செய்துள்ளார்.
எல்லோரும் மதிக்க வேண்டும்
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியது குறித்து பல அரசியல் தலைவர் விமர்சித்து வரும் நிலையில் நடிகர் சூரி கருத்து தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பேசிய விஜய், இந்திய பிரதமர் மோடியை மிஸ்டர் என்றும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்றும் கூறினார். இதற்கு திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சியினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சூரி தனது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்த போது விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவரிடம் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து விஜய் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு நான் பதில் கூறவில்லை என்று கூறிவிட்டு, "எல்லோருக்கும் எல்லோரும் வேண்டும். அரசியலை தாண்டி எல்லாரும் எல்லாவற்றையும் மதிக்க வேண்டும்.
அவர் சினிமாவை விட்டு தற்போது அரசியலுக்கு சென்றுள்ளார். அது அவரது விருப்பம். மீண்டும் அவர் சினிமாவுக்கு வரலாம். எனக்கும் அவரை பிடிக்கும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |