பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை? அமித்ஷா உடனான சந்திப்பில் நடந்தது என்ன?
அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலை ராஜினாமா கடிதம்?
ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டது.

அண்ணாமலை இரு திராவிட கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அவரின் தலைமையின் கீழ் பாஜக தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்றதாக கருத்து நிலவியது. 2021 நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் பாஜக 11.24 சதவீத வாக்குகளை பெற்றது.
இதனை தொடர்ந்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுகவை கூட்டணியில் இணைப்பதற்காக அண்ணாமலைக்கு பதிலாக நயினார் நாகேந்திரனை தலைமை பொறுப்பில் நியமித்தது.
அதிமுக உடன் கூட்டணி வேண்டாம் என பாஜக வளர தனித்து போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அண்ணாமலை அறிவித்தார.
இந்நிலையில், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து நேற்று டெல்லி செல்லும் முன் அவரிடம் கேட்டபோது, இன்னும் 2 நாட்களில் சொல்கிறேன் என கூறிவிட்டு சென்றார்.
இன்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்த அண்ணாமலை தனது நிலைப்பாடு குறித்து விளக்கமளித்து 5 பக்க ராஜினாமா கடிதத்தை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில், அண்ணாமலையை கட்சியில் இருக்க வைக்க மத்திய அமைச்சர் பதவி தருவதாக அமித்ஷா சமாதான முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

நயினாருக்கு டெல்லி அழைப்பு
ஆனாலும் அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று இரவு அல்லது நாளை காலை நயினார் நாகேந்திரன் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் 4 ஆம் திகதி அவரது பிறந்தநாள் வர உள்ள நிலையில், அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |