பொலிஸ் வேடத்தில் நடிகராக அறிமுகமாகும் சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி பொலிஸ் அதிகாரியாக இணைய தொடரில் நடித்துள்ளார்.
சவுரவ் கங்குலி
கிரிக்கெட் ரசிகர்களால் 'தாதா' என அழைக்கப்படுபவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி.
சமீபத்தில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் ராபின்ஹூட்(robinhood) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அதே போல், சவுரவ் கங்குலியும் வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் நடிப்பதன் மூலம் நடிப்பிற்குள் கால் பதித்துள்ளார்.
பொலிஸ் வேடம்
எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கிய நீரஜ் பாண்டே, 'காக்கி - தி பெங்கால் சாப்டர்' (Khakee: The Bengal Chapter) என்ற இணையத் தொடரை இயக்கி உள்ளார்.
The Bengal Tiger meets The Bengal Chapter 🔥
— Sourav Ganguly (@SGanguly99) March 17, 2025
Watch Khakee: The Bengal Chapter, out 20 March, only on Netflix. #KhakeeTheBengalChapterOnNetflix pic.twitter.com/OnrrWtHE9b
இந்த இணையத்தொடரில் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் சவுரவ் கங்குலி. அவருடன் ஜீத், புரோசன் ஜீத் சட்டர்ஜி, சாஸ்வதா பரம்விரதா சட்டர்ஜி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த தொடர் வரும் மார்ச் 20 ஆம் திகதி நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. பொலிஸ் உடையில் கங்குலி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதே போல் கங்குலியின் வாழ்க்கை வரலாறுதிரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகனாக ராஜ்குமார் ராவ் என்பவர் நடிக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |