டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சௌரவ் கங்குலி நியமனம்
sourav ganguly appointed as delhi capital head coach: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
DC தலைமை பயிற்சியாளராக கங்குலி
ஐபிஎல் தொடரில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளில் ஒன்றாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது.
இந்நிலையில், 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னர், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் பாரிய மாற்றம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஹேமங் பதானிக்கு பதிலாக, சௌரவ் கங்குலி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கங்குலி முன்னதாக 2019 ஐபிஎல் தொடரில் DC அணியின் வழிகாட்டியாக இருந்தார்.
மேலும், DC அணியின் உரிமையாளரான JSW Sports நிறுவனத்தின் கிரிக்கெட் இயக்குநராக 2024 ஆம் நியமிக்கப்பட்ட கங்குலி, 2025 SA20 தொடரில், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, "டெல்லி கேப்பிட்டல்ஸ் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு அணியாகும், மேலும் பல ஆண்டுகளாக அதனுடன் ஒரு வலுவான உறவைப் பகிர்ந்து வருகிறேன்.
Dilli, it's time for Dadagiri 🐅 Sourav Ganguly, Head Coach of the Tigers 🔥 https://t.co/EMTPQ9TB64
— Delhi Capitals (@DelhiCapitals) October 6, 2026
உரிமையாளர்கள், நிர்வாகம், துணைப் பணியாளர்கள் மற்றும் வீரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன், இது எனக்கு இந்த பொறுப்பை உற்சாகமானதாக ஆக்குகிறது" என தெரிவித்துள்ளார்.
இதே போல், யுவராஜ் சிங் உதவிப் பயிற்சியாளராகவும், இலங்கை முன்னாள் வீரர் சமிந்த வாஸ் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும், இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ராவும் சுழற்பந்து பயிற்சியாளராகவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.