தமிழ் பிக் பாஸ் 8யின் வெற்றியாளர் இவர்தான்! வெளியான தகவல்
பிக் பாஸ்-8யில் பார்வையாளர்களின் பெரும்பான்மையான ஆதரவை பெற்ற முத்துக்குமரன் வெற்றியாளராக தெரிவாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வைல்டு கார்டு
தமிழ் பிக் பாஸ் 8 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. வைல்டு கார்டு போட்டியாளர்களுடன் சேர்த்து 24 நபர்கள் இதில் கலந்துகொண்டனர்.
ஆனாலும் முத்துக்குமரன், சௌந்தர்யா, விஜி விஷால், பவித்ரா மற்றும் ரயான் ஆகிய ஐந்து பேரும் இறுதிகட்டம்வரை வந்தனர்.
இவர்களில் யார் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றப் போகிறார் என்ற கேள்வி பார்வையாளர்கள் இடையே நிலவி வருகிறது.
வெற்றியாளர்
இந்த நிலையில் பார்வையாளர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற முத்துக்குமரன் Titleஐ வென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வெற்றிக் கிண்ணத்துடன் பரிசுத்தொகையும் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |